மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தால் படித்த காலம் போய் தற்பொழுது மாணவர்களை பார்த்து  ஆசிரியர்கள் அச்சம்முறும் காலம் வந்துவிட்டது.பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டாலும் அத்துமீறி செல்போன் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் படிக்க முற்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த மாணவன் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி என்ற பகுதியில் அரசு பள்ளியில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இரண்டாவது பொதுத் தேர்வு வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் ஃபரவல் வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்ததால் 10 மாணவர்கள் சேர்ந்து அங்கு உள்ள நாற்காலி மேசை அங்கு வெற்றி அடித்து நொறுக்கினர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனைக்கண்ட மாவட்ட ஆட்சியர் அந்த 10 மாணவர்கள் இடைநீக்கம் செய்தார். மேலும் அந்த மாணவர்கள் உடைத்த பொருள்கள் அனைத்துக்கும் அவரது பெற்றோர்களின் இழப்பீடு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு இருக்கையில் மாணவர்கள் எந்த வகையில் செல் போனை பள்ளிக்கு எடுத்து வருகின்றனர். இனி மாணவர்கள் தொலைபேசியை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது என கடுமையாக கண்டித்துள்ளார். அவற்றை மீறி எடுத்து வந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்.பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் பாடங்களை படிக்காமல் ஒழுங்கினமற்ற செயல்களை செய்து வருகின்றனர்.

Leave a Comment