கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யாமல் யுஜிசி பரிந்துரையின்படி நடத்தவேண்டும்: உச்சநீதிமன்றம்

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த் தொற்று பரவலால் பொது முடக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வினை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் தில்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு மற்றும் இன்னும் நடத்தப்படவில்லை. இதனை யுஜிசி இன் பரிந்துரையின் படி தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இதனை எதிர்த்து சிவசேனா மற்றும் மாணவர்கள் அமைப்பு, பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த இந்த விசாரணையின்போது யுஜிசி தரப்பில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்கள் தரப்பில் இருந்து வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மற்றும் யுவ சேனா தரப்பிலிருந்து வழக்கறிஞர் ஷ்யாம் திவானும் ஆஜராகினர்.

இது குறித்து பேசிய துஷார் மேத்தா, “யுஜிசி என் பரிந்துரை உத்தரவின்படி, மாநில அரசுகள் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வினை ரத்து செய்யக்கூடாது. இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க எந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கிடையாது. செப்டம்பர் மாதத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

அப்போது மாணவர்கள் தரப்பில் இருந்து அபிஷேக் சிங்வி பேசியதாவது, “தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் எப்படி தேர்வுகளை நடத்த முடியும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்ற நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.