குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!
குங்குமப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.
குங்குமப் பூவில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் , குரோசின் இவை நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பருகுவதன் மூலமாக நம் உடலில் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது.
பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து குடிப்பதன் காரணமாக நீண்ட உறக்கத்தை அளிக்கிறது. நினைவு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. பெண்களுக்கு ரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலங்களில் குங்குமப்பூ மற்றும் பால் கலந்து பருகுவதன் மூலமாக வலியை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு கப் பாலில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பருகிவர மன அழுத்தம் குறைகிறது. குங்குமப்பூவில் அதிகப்படியான குரோசின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.
குங்குமப்பூவில் குரோசின் மற்றும் சாப்ட்ரவுண்ட் ஆகியவை உள்ளதன் காரணமாக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கூடியது குங்குமப்பூவில் உள்ள குரோசின் நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக செல்வதற்கும் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
குங்குமப்பூ மற்றும் பால் கலந்து பருகி வர இருமல் மற்றும் சளியை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் இதை சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பயனை தரவுள்ளது.