அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே
ரோஜா இதழில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உள்ளன. ரோஸ் வாட்டர் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போக்கும். நம் அழகை மேலும் பிரகாசிக்க செய்யும்.
சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் –
கண் வீக்கம்
ப்ரிட்ஜில் இருக்கும் ரோஸ்வாட்டரை, சிறிது காட்டனில் நனைத்து கண்கள் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் கண்களில் உள்ள வீக்கம் குறையும். கண்கள் அழகாக தெரியும்.
சருமத்திற்கு
கோடை வெயிலால் முகம் சோர்ந்து, பொலிவிழக்கும். அப்போது, ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தால் முகம் உடனே புத்துணர்ச்சி அடையும். இதை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
மென்மையான சருமத்திற்கு
தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.
சரும வறட்சி
ரோஸ் வாட்டரை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் வறட்சி இல்லாமல் அழகாக மாறும்.
மேக்கப் ரிமூவர்
இரவில் தூங்கச் செல்லும் முன், ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமம் பளிச்சிடும்.
ஸ்ப்ரே
முகத்திற்கு மேக்கப் போட்ட பிறகு ரோஸ் வாட்டரை லேசாக முகத்தில் தெளித்தால் முகம் அழகாக மாறும்.
சிறந்த ஆப்டர் ஷேவ்
ஷேவிங் செய்து முடித்த பிறகு ரோஸ் வாட்டரை அந்த இடத்தில் தடவினால் ஷேவிங்கால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு நீங்கும்.
சரும டோனர்
ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போகி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்யும். ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்தால் சருமம் அழகாக மாறும்.