ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நகைச்சுவை நாயகன் வடிவேலு!

Photo of author

By Parthipan K

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நகைச்சுவை நாயகன் வடிவேலு!

நகைச்சுவை நாயகன் வடிவேலு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர் தனது நகைச்சுவை கலைகளின் மூலம் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.ஆனால் ஒரு சில ஆண்டுகளாகவே அவருக்கு பட வாய்ப்புக் கிடைக்கவில்லை ஏனென்றால், சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தார்.

வடிவேலு அந்த படத்தின் போது இயக்குனருடன் ஒருசில பிரச்சனைகளால்  சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இதை அடுத்து வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது  சினிமா தயாரிப்பாளர் சங்கம். கொரோனாவின் மூலம் உங்களுக்கு  ஒரு வருஷம் தான் லாக்டவுன் எனக்கோ பத்து வருஷம் என்று நிகழ்ச்சி ஒன்றில் கண்கலங்கினார். இருந்தாலும் பல ஆண்டுகளாக படத்தில் நடிக்காவிட்டாலும்  கூட மீம்ஸ்கள் மூலம் நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் 24ஆம் புலிகேசி படத்தை தூசு தட்டுகிறார்கள் இன்று காலை தலைமை செயலகத்திற்கு வந்த வடிவேலு முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிதிநிவாரண தொகையாக 5 லட்சம் கொடுத்திருக்கிறார். அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார் அப்பொழுது திமுகவுக்கு பிரச்சாரம் செய்த பிறகு தான் உங்களுக்கு படவாய்ப்புகள் குறைந்தது என்று கருத்து இருக்கிறது, மீண்டும் திமுக ஆட்சி அமைந்து இருக்கிறது மீண்டும் பழையபடி அதிகமான திரைப்படங்களில் உங்களை பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியது என்னவென்றால்! நல்லதே நடக்கும் என்று பதிலளித்திருக்கிறார். அவர் அளித்த பதிலை பார்த்த ரசிகர்கள் மீண்டும் நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமாவுக்கு வரப்போகிறார் என்ற கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் ‘அரசியல்’ வேண்டாம் என்று வடிவேலு கூறியதைப் பார்த்து ரசிகர்கள் இந்தத் தெளிவு போதும் நீங்கள் பெரிய உயரத்திற்கு வருவீர்கள் என்கின்றார்கள்.