திடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதானா?

0
73

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதை தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் ஐந்து அவசர சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

அதோடு உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டவர்கள் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை அமர்வின்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான சூழலில், மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதாவது ஜூலை மாதம் 18ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.ஜூலை மாதம் 18ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியை திராவிடர் முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. .அதோடு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையின் செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விவசாயிகளின் போராட்டம் நீட்தேர்வு போன்றவை தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.