ஒரே வார்த்தையில் திமுகவின் மானத்தை வாங்கிய அண்ணாமலை!

0
67

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அவர் எதிர்வரும் 16ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவி ஏற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அறிவித்திருக்கின்றது. வரும் 16ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரையில் உற்சாகமான வரவேற்பு கொடுப்பதற்கு அந்த கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், இன்றையதினம் கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் அண்ணாமலை வழிபட்டார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்வரும் 16ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணி அளவில் சென்னையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நான் பதவி ஏற்க இருக்கின்றேன். சென்னைக்கு செல்லும் வழி நெடுகிலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு எங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்காக நான் மிகச் சிறப்பாக செயல்படுவேன் அனுபவமும், இளமையும் சேர்ந்த ஒரு கூட்டு முயற்சியால் தான் தமிழ்நாட்டின் மிகப் பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி அடைய முடியும். பாரதிய ஜனதா கட்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருந்து வருகிறார்கள். மற்ற கட்சிகளில் ஒரு தலைவர் ஒரே குடும்பம் என்று இருப்பார்கள் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியில் அந்த பாகுபாடு கிடையாது.

ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி தனிமனித கட்சி இல்லை இங்கு வயது முக்கியம் கிடையாது என்று தெரிவித்திருக்கின்றார் அண்ணாமலை. அத்தோடு அவர் இவ்வாறு தெரிவித்ததற்கு காரணம் திமுகவை குறிப்பிட்டு தான் என்று தெரிவிக்கப்படுகிறது.