“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

Photo of author

By Kowsalya

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது.

இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு கடிதங்கள் மற்றும் பரிசு பொருட்கள் அனைத்தும் குவிய தொடங்கியது. தினமும் அவர் வீடியோ எப்பொழுது வரும் என்று இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர் கடிதங்களைப் பிரித்துப் படித்து காண்பிக்கும் பொழுது, அவர் படித்து காண்பிக்கும் விதமும், அவர் சொல்லும் விதமும் இளைஞர்களுக்கு பிடித்துப்போய் அதனை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். ஒரு சிலர் தலைவன் என்று கூட கூப்பிட ஆரம்பித்து உள்ளனர்.

அவருக்கு வரும் பரிசு பொருட்களையும் அவருக்கு வரும் கடிதங்களையும் அவர் படித்து காண்பிக்கும் கேலியான பேச்சு வழக்கும், சொற்களுக்கும் ,அவரது ஊர்ப்பேச்சு வழக்கமும் ஒருவித சிரிப்பை உண்டாக்குகிறது.இவரை வைத்து எக்கச்சக்கமான மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. நார பயலே செத்த பயலே என்று சொல்லி சொல்லியே டிக்டாக்கில் ஜி பி முத்து பிரபலமானர்.

இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாரின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் வெளிடும் வீடியோ, அவர் கடிதத்தை படித்து காண்பிக்கும் பொது பேசும் பேச்சும், அவர் செய்கையும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.