அதிர்ச்சியில் இருந்த கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன தருணம்!

0
183

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் இன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்ற எல்லாக் கட்சிகளுமே கடைசிவரையில் எந்த ஒரு முடிவுகளையும் எட்டாமல் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படாமல் இழுபறியில் தான் இருந்தன.

அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் கடைசி வரையில் கட்சிகள் அனைத்தும் அதிருப்த்தில்தான் இருந்தன. இப்போது இருக்கும் தலைவர்களுக்கு தலைமை பண்பு இல்லை என்று திருமாவளவன் மிகக்கடுமையாக சாடி வந்தார். இதன் காரணமாக கூட்டணி மாறி வேறு கூட்டணிக்கு செல்வார்கள் என்ற பேச்சுக்களும் எழுந்தது.

இவ்வாறான பேச்சுக்கள் எழுதத் தொடங்கிய உடனேயே மக்கள் நீதி மையம் கட்சியின் கமல்ஹாசன் திமுகவின் அதிருப்தி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் கடைசி சமயத்தில் திமுக கொடுத்த இடங்களை வாங்கி கொண்டு கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. குறைவான இடங்கள் கிடைத்தாலும் வெற்றிக் கூட்டணியில் இருப்பதைத் தான் நாங்கள் விரும்புகிறோம் என்று காரணம் தெரிவித்தாலும், அவர்கள் அதிருப்தியில் தான் இருந்திருக்கிறார்கள். அதனை உணர்ந்த ஸ்டாலின் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சியினரை உள்ளாட்சித் தேர்தலில் திருப்திபடுத்த முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சமயத்தில் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற இயலவில்லை. இருந்தாலும் ஆட்சியை பிடித்து இருக்கின்றோம். அடுத்த தேர்தலில் இமாலய வெற்றியை பதிவு செய்வோம் அந்த அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் இடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அதோடு மேலும் தெரிவித்த அவர் எதிர்கட்சியாக நாம் இருந்த சமயத்தில் எந்த விமர்சனமும் இல்லை இருந்தாலும் ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தால், ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. விமர்சிப்பார்கள் அதற்கு நாம் எந்தவிதமான இடம் தரக்கூடாது என்று மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

சட்டசபைத் தேர்தலின்போது ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவர்கள் தங்களுடைய தவறுகளை இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும் எனவும், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றார் ஸ்டாலின். அதோடு சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதியை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஉங்க PF பணம் எவ்வளவு இருக்குனு தெரிஞ்சுக்கணுமா? இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!
Next article“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here