அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை படு தீவிரமாக பரவி வருகிறது.அதி வேகமாக பரவிவரும் இந்த கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்தவகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக பல மாநிலங்களில் அதிக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இர நேர ஊரடங்கு என செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையானது தினசரி 30 ஆயிரத்தை தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைநகரான பெங்களூருவில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
நாட்டிலுள்ள பெருநகரங்களில் பெங்களூரு தான் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 2 லட்சத்தையும் மீறி விட்டது.
இந்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்தது. அந்தவகையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4-ந் தேதி வரை வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கையும் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
ஆனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்துவரும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதையடுத்து நாளை இரவு 9 மணி முதல் மே 10 ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் என தினமும் 4 மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.