இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

0
102

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என திமுகவும், வெற்றிநடை போடும் தமிழகம் என்று அதிமுகவும், பரபரப்பாக தமிழக அரசியலில் நகர்த்திக் கொண்டிருந்த அந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்தது.

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றும் எந்த துறைக்கு யார் யார் அமைச்சர் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது. 10 வருடகாலமாக எந்த ஒரு அதிகாரத்தையும் செய்யாமல் இருக்கும் திமுக ஆதரவு அதிகாரிகள் பலரும் தலைமைச் செயலகத்தில் புதிய பொறுப்புகளை பிடிப்பதற்கும், அமைச்சர்களிடம் உதவியாளராக பணியில் சேர்வதற்கு அவரவர்களுக்கான வேலைகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருசிலர் தேர்தல் செலவிற்கு பணம் கொடுத்து கூட உதவி புரிந்து இருக்கிறார்கள்.

ஆனால் இதுவரையில் தமிழகத்தில் வெற்றியடைய போவது ஆளுங்கட்சியான அதிமுக அல்லது எதிர்கட்சியான திமுக என்பது இன்று வரையில் தெரியவில்லை ஒருவேளை திமுக வெற்றி பெற்றால் இந்த அதிகாரிகளின் எண்ணம் சாத்தியமாகலாம். தமிழகம் மற்றும் கேரளா எல்லை பகுதியாக இருந்து வருவதால் பொள்ளாச்சி பலவகையில் அரசு அதிகாரிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, மிகப் பெரிய தொகைகளை கொட்டிக் கொடுத்து எல்லா அரசு அதிகாரிகளும் பள்ளிக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் இடம் பெற்றவர்கள் இருந்து வருகிறார்கள் ஆட்சி மாறி விட்டால் கொடுத்த காசு அவ்வளவுதான் என்ற காரணத்தால், வசூல் வேட்டையில் மிகத் தீவிரமாக இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் தூக்கமில்லாமல் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.