கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா??
தமிழகத்தில் மொத்தம் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஐநூறு சில்லறை கடைகள் தற்போது மூடப்பட்டு விட்டது.
இந்த சில்லறை கடைகளால் அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருவாயும் வராததால் இதை மூடுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு விடப்பட்டு தற்போது ஐநூறு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டு விட்டது.
இதனால் பொது மக்களும், டாஸ்மாக் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது மீதமுள்ள நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மட்டும் தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மயமாக்க மாற்ற அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது கணினி மயமாக்குவதற்கு தேவையான கருவிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, மதுபானங்களின் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்துமே கணினி மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது, நாட்டில் உள்ள அனைத்திலுமே தற்போது மின்னணு முறை பண பரிமாற்றம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் யுபிஐ வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தி வருகின்றனர்.
இந்த மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையானது தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை கணினி மயமாக்குவதன் மூலம் அதிகமான விலையில் மதுபானம் விற்பது தடுக்கப்படும் என்று கூறப்ப்ட்கிறது.