தொடர்ந்து கொட்டும் தலை முடி! இதை தடுக்க எளிமையான மூன்று வழிகள் இதோ!
நம்மில் பலருக்கும் இருக்கும் தலை முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்வதற்கு பயன்படும் எளிமையான மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் பலரும் உடலுக்கு முழு கவனம் செலுத்துவது போல நம்முடைய தலை முடிக்கும் கவனம் செலுத்தி அதை பராமரித்து வருகின்றோம். தலை முடி உதிரக்கூடாது என்பதற்காக பலவிதமான ஷேம்புகள், எண்ணெய்கள், ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்த வழிமுறைகள் அனைத்தும் நமக்கு பயன்படுத்தும் பொழுது நல்லதொரு தீர்வை கொடுக்கும். பின்னர் நாட்கள் செல்ல செல்ல பக்க விளைவுகளை தரக்கூடும். அதாவது தலை முடி அதிகமாக உதிரத் தொடங்குதல், முடி உடைதல் போன்ற பல பிரச்சனைகளை உருவாக்கும்.
இந்த பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த வேண்டும் என்று அதையே நினைத்து நினைத்து மன வருத்தம் அதிகமாகும். இதுவும் முடி உதிர்வதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. எனவே தம்பிக்கு பெரியதொரு பிரச்சனையாக இருக்கும் தலை முடி உதிர்தல் பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அடுத்து பார்க்கலாம்.
தலை முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் மூன்று வழிமுறைகள்…
* தலை முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அத்திப்பழம் உதவியாக இருக்கின்றது. இதில் தலை முடிக்கு தேலையா வைட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. எனவே தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.
* நாம் அதிகளவில் வெயிலில் சுற்றும் வேலையை பார்த்து வருகின்றோம். எனவே முடி உதிர்தலை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் தடுக்கப்படும்.
* தலை முடி உதிர்தலை தடுக்க தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் தலை முடி உதிர்தல் பிரச்சனை குணமாகும்.