தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! 

0
154
Smuggling of ration rice from Tamil Nadu to Kerala - caught by the police!
Smuggling of ration rice from Tamil Nadu to Kerala - caught by the police!

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ரேசன் பொருட்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது.

இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வரும் நிலையில், இன்று குமரியில் உள்ள கண்ணுமாமூடு சோதனை சாவடியில் சோதனை செய்து வந்தனர், அங்கு சந்தேகப்படும்படி இருந்த கார் காரை சோதனை செய்வதற்கு போலீசார் நிறுத்தினர். அப்போது ஓட்டுநர் காரை விட்டு தப்பியோட முயன்ற போது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஜெய்சன் என்பதும், அவர் மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் காரை சோதனை செய்ததில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடித்தனர், மேற்கொண்டு விசாரணையில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் அக்காரின் ஓட்டுனரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அந்த ஓட்டுனரிடம் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் அரிசி மற்றும் காரை உணவு தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

Previous article“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!
Next articleநடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!