தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

0
154

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் நாமக்கல் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருச்சி திருவாரூர் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleதொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!!
Next articleபெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!