தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

Photo of author

By Divya

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து
நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.

திமுகவில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ள புகாரில் விரைவில் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமைச்சர்கள் பலர் மீது இருந்த சொத்து குவிப்பு, மணல் கொள்ளை, ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வருவதால் மக்கள் மத்தியில் திமுகவின் பெயர் முற்றிலும் டேமேஜாகி விட்டது.

தற்பொழுது வரை சிறை வாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய போதும்… அவர் செய்த குற்றச் செயல்களுக்கு போதிய ஆதாரம் இருப்பதினால் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

புழல் சிறை… கோர்ட்… என்று அலைந்து வரும் செந்தில் பாலாஜிக்கு 18வது முறையாக நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு இருக்கின்றது.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 7 ஆம் தேதி வரை அவரின் காவலை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீந்திமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.