ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!

0
304
#image_title

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று ‘ஆயுஸ்மான் பாரத் யோஜனா’. இந்த திட்டம் கடந்த 2018 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்த திட்டத்தில் இணைக்கப்படும் பயனாளிகளுக்கு அவர்களது மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்றுக் கொள்ள முடியும்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருந்து வருகின்றது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டிருக்கும் இந்த திட்டத்தில் சேர மத்திய அரசு சில தகுதிகளை வரிசைப்படுத்திக்கிறது.

ஆயுஸ்மான் பாரத் யோஜனா – பயனாளிகளாக சேர தகுதி..

*இந்திய குடிமனாக இருத்தல் வேண்டும்
*ரேசன் கார்டு வைத்திருக்க வேண்டும்
*ஆண்டு வருமானம்
*சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை
*பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை
*துப்புரவுத் தொழிலாளி
*யாசகம் பெறுபவர்கள்
*நிலம் இல்லாதவர்கள், கூரை வீட்டில் வாசிப்பவர்கள் தகுதியானர்வர்கள்

மேலும் pmjay.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்து அதில் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும். பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்யவும்.

பிறகு ரேசன் கார்டு எண் மற்றும் தாங்கள் வசிக்கும் மாநிலத்தை குறிப்பிடவும். இவ்வாறு செய்த பின்னர் நீங்கள் ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு தகுதியானவர்களா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.