தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!!
நாட்டில் அதிகரித்து வரும் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உததரவு பிறப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் மகேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி வெளிவந்த தகவலில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 81,063 திருமணமான ஆண்கள், 28,680 பேர் திருமணமான பெண்கள்.
இதில் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவும், குடும்ப வன்முறையால் பாதிக்கபடும் ஆண்களின் புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவிட கோரி, மற்றும் தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு விசாரணைக்கு வந்த நிலையில், திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொல்லும் சம்பவங்களில் குடும்ப வன்முறைகளை கையாளுவதற்கான நெறிமுறைகள் வகுக்கவும், தேசிய ஆண்கள் ஆணையம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தது.