திரைத்துறையிலிருந்து விலகும் விஜய்.. முழு நேர அரசியல்வாதியாக மாறும் தளபதி!! வெளியான தகவலால் பரபரப்பு!!

0
64
Vijay to frame the film industry. Excited by the Informatione releist!!
Vijay to frame the film industry. Excited by the Informatione releist!!

திரைத்துறையிலிருந்து விலகும் விஜய்.. முழு நேர அரசியல்வாதியாக மாறும் தளபதி!! வெளியான தகவலால் பரபரப்பு!!

விஜயின் லியோ படம் எப்பொழுது வெளியாகும் பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இதன் நடுவே இவர் அரசியலில் நுழைய அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவரது ரசிகர்கள் பெருமளவு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் நின்று சில இடங்களில் கணிசமான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அந்த உள்ளாட்சி தேர்தலின் பொழுது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் பெயரை உபயோகம் செய்து கொள்ள விஜய் அனுமதி அளித்த பொழுது இவர் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார் என பலரும் கூறினர். அதன்படி தான் தற்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளது. அந்த வகையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது எனத் தொடங்கி மதிய உணவு என பலவற்றை இயக்கம் சார்பாக செய்தனர்.

அண்மையில் கூட தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பரிசளித்தார். மேற்கொண்டு அவர்களிடம், நாளைய வாக்காளர்களாக மாறப் போவது நீங்கள் தான், எனவே சரியான நபரை தேர்ந்தெடுப்பதோடு ஓட்டுக்கு பணம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

இவ்வாறு அவர் மாணவர்களிடம் கூறியது, தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போலவே இருந்தது. அது மட்டுமின்றி  சில நாட்களாகவே இயக்க நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம். தற்பொழுது லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க இருக்கும் விஜய் அந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும் மூன்று வருடங்கள் ஓய்வு பெற உள்ளாராம். மூன்று வருடங்கள் ஓய்வு பெற்று நிரந்தர அரசியல்வாதியாக களத்தில் இறங்கி வேலை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.