State

தொடரும் பாலியல் தொல்லை! இன்ஸ்பெக்டர் கைது! தாயே உடந்தை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை எஸ் ஐ சதிஷின் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதை எடுத்து புகாரின் அடிப்படையில் சதீஷின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அருகே வசிக்கும் ரேவதி என்பவருடன் எஸ் ஐ சதீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் ரேவதியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் தாய் ரேவதி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பெற்ற தாய் மற்றும் உறவினரே சிறுமியை பாலியல் தொல்லை செய்வதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற கூடிய போலீஸ் அதிகாரிகள் இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்திற்குரியது. அவருக்கு மிகுந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment