‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கம்!! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
112
#image_title

‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கம்!! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ் திரைத்துறையில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் அவர்களின் 67 படமான ‘லியோ’ படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் வருகின்ற அக்டோபர் 19 அன்று திரைக்கு வர இருக்கின்றது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து சஞ்சய் தத்,அர்ஜூன்,பிரியா ஆனந்த்,மிஷ்கின்,கவுதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நான் ரெடி’ என்ற பாடல் ஜூன் 22 அன்று வெளியிடப்பட்டது.
பாடல் ஆசிரியர் விஷ்ணு எடவன் எழுதிய ‘நான் ரெடி’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.இந்த பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை சமூக வலைதள செயலியான யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றது.

மேலும் இப்பாடலில் சர்ச்சையான வரிகள் இடம் பெற்று உள்ளதென்று ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதன் காரணமாக தற்பொழுது இப்பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய வரிகளை சென்சார் வாரியம் அதிரடியாக நீக்கி இருக்கின்றது.இந்நிலையில் தற்பொழுது பாடல் வரிகள் நீக்கப்பட்ட சென்சார் சான்றிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நான் ரெடி’ பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க’ மற்றும் ‘மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவான்டா’ என்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் ‘நான் ரெடி’ பாடலில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற க்ளோசப் ஷாட்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடல் வரிகள் நீக்கம் டிவியில் ஒளிபரப்பாவதற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படும் நிலையில் திரையரங்கில் இந்த வரிகள் இடம்பெறுமா? இல்லையா? என்பது குறித்து தகவல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்சார் வாரியத்தின் இந்த அதிரடியால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை மேற்கோள்காட்டி அதனை ஏன் சென்சார் வாரியம் நீக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleஅருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleஉடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!