மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்!
திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கட்டணம் இல்லா பயண சீட்டு பெரும் திட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை திமுக ஆட்சி தான் செய்து வருகின்றது என திமுக மெத்தனம் பேசி வருகின்றது.அந்த வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசினார் அப்போது அவர் பெண்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஓசி பஸில் தானே செல்கிறீர்கள் என கேட்டார்.அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் விராளிமாயன்பட்டியில் மூதாட்டி ஒருவர் விவசாயம் செய்து பெற்ற வெண்டைக்காயை மூட்டையாக கட்டி அதனை சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்ல அரசு பேருந்தில் வந்துள்ளார்.அப்போது அந்த மூட்டைக்கு நடத்துநர் லக்கேஜ் கட்டணமாக ரூ 15 வசூல் செய்துள்ளார்.
மேலும் அந்த பேருந்திற்கு டிக்கெட் பரிசோதகர் வந்துள்ளார்.அப்போது அவர் அந்த மூட்டையை பார்த்து இந்த மூட்டை சுமார் 50கிலோ எடை கொண்டிருக்கும் என கூறி லக்கேஜ் கட்டணமாக ரூ 50 வசூல் செய்துள்ளார்.மேலும் அவர் ஓசியில் பயணம் செய்தால் கண்டதையும் கொண்டு வருவாயா என மூதாட்டியை கடுமையாக திட்டியுள்ளார்.
அதனால் மனவேதனையடைந்த மூதாட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.அப்போது போலீசார் அந்த மூட்டையின் எடையை சரிபார்த்தனர் அந்த மூட்டை 24கிலோ இருந்துள்ளது.அதனையடுத்து போலீசார் டிக்கெட் பரிசோதகர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூதாட்டியிடம் கூறினார்கள்.