குக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் வரப்போகிறது!! ஆங்கர் யார் தெரியுமா?!

0
237

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது குக்குகளை மட்டும் வைத்து சமைக்காமல் கோமாளிகளையும் வைத்து சமைத்து, அதில் பல கேலிகளையும், கிண்டல்களையும் செய்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

மேலும் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளி திரை பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்தது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் இது மாபெரும் வெற்றி அடைந்தது. அதிலும் மற்ற சேனல்கள் உட்பட விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளையும் தாண்டி டிஆர்பி சாதனை படைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமே தான். இவ்வளவு வரவேற்பை பெற காரணம் அதில் கலந்து கொண்ட கோமாளிகள் தான். சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சக்தி, சுனிதா மற்றும் சரத் ஆகியோர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தனர்.

குக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் வரப்போகிறது!! ஆங்கர் யார் தெரியுமா?!

கோமாளிகள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பிரபலங்களான சகிலா, கனி, பாபா மாஸ்டர், பவித்ரா, மதுரை முத்து மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த நிகழ்ச்சி மூலம் பெரும் வரவேற்பினை பெற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் மற்றும் நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக குவிந்தது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது. மேலும் நிகழ்ச்சி முடிவடையும் போது இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணுவதாக நிறைய பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் சீசன் 3 ஆரம்பமாகப் போகிறது என்ற செய்தியை வெங்கடேஷ் பட் முன் வெளியிட்டிருந்தார். தற்போது, ஜாக்சனுடன் இணைந்து இன்னொரு நபரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அது வேறு யாருமில்லை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான விஜே மணிமேகலை தான். இவர் கடந்த 2 மாதங்களாக கோமாளியாக மக்களை சிரிக்க வைத்தார். இப்போது ரக்ஷன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கோமாளியாக இருக்கும் போதே ஜட்ஜ் மற்றும் இவர்களுடன் இருக்கும் கன்டஸ்டண்டுகளையும் மிகவும் கலாய்ப்பார். தற்போது வரும் சீசனில் இவர் தொகுப்பாளராக இருப்பது அனைவரையும் கலாய்த்து தள்ள போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரப்போகும் சீசனுக்காக ரசிகர்கள் மிக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Previous articleகொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!
Next articleமாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அமல்!! தேர்வு இயக்ககம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here