என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

Photo of author

By Rupa

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

கொரோனாவின் 2 வது அலை சுனாமி போல பரவி வருகிறது அதைக்கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவீர முடிவுகளை எடுத்து வருகின்றனர்.அதற்கடுத்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவு தொற்று பரவலினால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டதை சம்மாளிக்க முடியாமல் மத்திய,அரசும் மாநில அரசும் தவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூரி மக்களின் முன் போலீசார் பலவித விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சந்தோஷ் நாராயணின் இசையில்,அவரது மகள் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் அதிக அளவு வரவேற்பை பெற்றது.அப்பாட்டானது பட்டித்தொட்டி எங்கும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.அதனால் அப்பாட்டின் மூலம் கேரளா போலீஸ் முகக்கவசம் அணிந்து மக்கள் முன் நடனமாடி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அதிக அளவு வைரலாகி வருகிறது.போலிஸ் உயர் அதிகாரிகள் இவர்கள் எடுத்த இந்த விழிப்புணர்வு நடவடிக்கைக்கு பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.மக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.