BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில் ஊரடங்கா?
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது உடலில் எதிர்ப்பு சக்தியாக அது செயல்படும் என கூறியுள்ளனர்.
கொரோனாவின் முதல் அலையை விட இந்த இரண்டாம் அலையினால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனை கட்டுப்படுத்த முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியும் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த முடியா காரணத்தினால் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
மக்களுக்கு இன்று தடுப்பூசி முகாம் ஒன்று அமைத்து வெற்றிகரமாக தற்போது ஐந்தாவது வாரமாக நடக்க உள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ள மாவட்டங்களில் அதிகளவு கவனம் செலுத்துவதாக கூறியுள்ளனர். அந்த வகையில் எதிர்ப்பு சக்தி குறைந்த மாவட்டங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்தனர். அதில் விருதுநகர், தென்காசி, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கு அதிகமாக எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றனர். அம்மாவட்டத்தைப் போலவே பெரம்பலூர், அரியலூர் ,நீலகிரி ,கரூர் மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கு குறைவான எதிர்ப்பு சக்தி இல்லாமல் உள்ளனர். இதனால் இம் மாவட்டத்திற்கு அதிகம் கவனம் செலுத்தி நடைபெறவிருக்கும் ஐந்தாவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமைப்பதில் அதிகக் கவனம் ஈட்டி வருகின்றனர். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களிடம் அதிவேகத்தில் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அவ்வாறு தொற்று அதிக அளவு பரவ நேர்ந்தால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.