தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

0
73

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்ததால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த அளவே நிலக்கரி அனுப்பிவைக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு தினமும் 62,000 டன் நிலக்கரி அனுப்பிவைக்கப்படும் நிலையில், தற்போது அதில் 60 சதவீதம் நிலக்கரி மட்டும்தான் அனுப்பி வைக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் தமிழக மக்கள் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்படுவார்கள் இதனால், தமிழக முதல்வர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறி உறுதிசெய்ப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.