மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா உறுதி! பள்ளிகள் திறக்க தடை!
கொரோனா தொற்று பாதிப்பானது தற்போதுதான் குறைந்து காணப்படுகிறது. இரண்டு அலை கடந்த போதிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்பித்தனர். தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனையடுத்து இன்னும் சில மாநிலங்களில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்தி வருகிந்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளனர். பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்லூரிகள் கடைபிடித்தாலும் தொற்று பாதிப்பு பரவி கொண்டே தான் உள்ளது.சில இடங்களில் அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் குடகு மடிகேரி பகுதியில் ஜவஹர் வித்யாலயா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்பொழுது தான் கர்நாடகாவிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நேரடி வகுப்பு படிக்க வரும் சில மாணவர்களுக்கு காய்ச்சல் , சளி ஏற்பட்டது. அதனால் அங்கு உள்ள 287 மாணவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
பரிசோதனை செய்ததில் முப்பத்திமூன்று மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் நெகட்டிவ் என்று சோதனையில் தெரிய வந்த மாணவர்களையும் ஏழு நாட்களுக்கு தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும் அப்பகுதியை கொரோனா மண்டலமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த பள்ளிக்கூடத்தை மாவட்ட சுகாதார அதிகாரி பார்வையிட்டார். மேலும் அவர் பெற்றோர்களிடம் அச்சப்பட வேண்டாம் என்று கூறயுள்ளார். ஒரே பள்ளியை சேர்ந்த 31 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு காணப்படுவதால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.இவ்வாறு தொடர்ந்து தொற்று பாதிப்பானது மாணவர்களுக்கிடையே அதிகரித்தால் கட்டாயம் பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்படும்.