பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.