இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

0
149

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

உலகமே கொரோனா பீதியில் பயந்துபோன ஆபத்தான சூழலில், கொரோனாவை பரப்புவோம் வாருங்கள் என்று முகநூலில் முஜீப் முகம்மது என்ற நபர் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக்கில் “நாம் அனைவரும் சேர்ந்து வைரஸை பரப்புவோம் வாருங்கள்” என்று முஜீம் முகம்மது என்ற ஐடியில் இளைஞர் ஒருவர் பதிவிட்டது பலரிடம் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. வேண்டுமென்றே இப்படி செய்தாரா அல்லது பொய்யான ஐடியா என்று பலர் சோதனை செய்து உண்மையை வெளியிட்டனர்.

முகநூல் ஐடியை இணையதளவாசிகள் கண்டுபிடித்து வெளியிட்டனர். பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் முஜீப் முகம்மது என்பவர்தான் இதை பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவரது பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Troll_Maafia/status/1243516880544989190?s=20

இந்நிலையில் தவறான தகவலை பரப்பிய ஐடியை சிலர் டுவிட்டர் மற்றும் முகநூலில் வெட்டவெளிச்சமாக்கி எதிர்ப்பையும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். தகவலை அறிந்த இன்போசிஸ் நிறுவனம், நடந்த சம்பவம் உண்மையெனில் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதியளித்துள்ளது.

கொரோனாவால் சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை பரப்பலாம் வாருங்கள் என்று கூறிய நபரின் பேச்சு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி
Next articleThe mechanics of casinogames at Box 24 Casino Mobile