உலகையே பயத்தில் கும்பிடு போட வைத்த கொரோனா பீதி!

Photo of author

By Parthipan K

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இந்த நோய் தொற்று இந்தியாவிலும் பரவி 78 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் கிருமி கைக்குலுக்குதல் தொடுதல் போன்ற செயல்களாலேயே அதிகம் பரவுகிறது.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க கை குலுக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வரவேற்கும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கு இடையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பணியாளர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்துகிறார். இதனை பார்த்த பணியாளர்கள் புன் சிரிப்புடன் பதில் வணக்கம் செலுத்தினர்.

இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் டிரம்ப் அயர்லாந்து பிரதமர் இருவரும் சந்திக்கும் போது வணக்கம் கூறி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப் தான் இந்தியா சென்று வந்ததில் இருந்தே வணக்கம் கூறுவதையே பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

ஒருபக்கம் கொரோனா வைரஸ் பயத்தால் தான் அனைவரும் தமிழர் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்பட்டாலும் தமிழர் கலாச்சாரம் பரவுவது நமக்கு பெருமை தான் மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.