10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று! கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3!

0
127

10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று! கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3!

இந்தியா முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று உயிரிழந்தார். தும்கூரு மாவட்ட ஷிரா தாலுக்காவை சேர்ந்த இந்த முதியவர் வேலை காரணமாக அரபு நாடுகளுக்கு சென்றிருந்தார் கடந்த 5ஆம் தேதி ஜம்பர்க் கிராந்தி என்னும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லிக்கு சென்று, அங்குள்ள ஜியாமிய மசூதியில் வழிபாட்டில் கலந்து கொண்டு பின்னர் அவரது சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதனையடுத்து கடந்த 18 ஆம் தேதி அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொல்லை அதிகம் ஏற்பட்டதால் 19 ஆம் தேதி தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் பின்னர் அவரை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

அவருடன் பழகிய நபர்களையும் தனிமையில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு மாதிரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் நேற்று மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கர்நாடக முதியவரை தொடர்ந்து 10 மாத குழந்தை உட்பட இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Previous articleமுக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!
Next articleகொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு