இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Photo of author

By Preethi

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையானது 38 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 499 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்து 14 ஆயிரத்து 108 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 08 ஆயிரத்து 456 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 665 பேர் ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 40 கோடியே 64லட்சத்து 81 ஆயிரத்து 493 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. கொரோனா மூன்றாம் அலையானது இரண்டாம் அலையை காட்டிலும் மிகவும் தீவிரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தடுப்பூசி போடாதவர்களை தான் அதிகமாக பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.