வண்டலூரில் புலிகளுக்கும் கொரோனா டெஸ்ட்! சிங்கம் இறந்ததால் நடவடிக்கை!

Photo of author

By Mithra

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உள்ள சிங்கங்கள் சரியான உணவு உண்ணாமல் இருந்தன. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட டெஸ்டில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அன்று மாலையே தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்டன. விஜி மற்றும் சசி என்ற இரண்டு பெண் சிங்கங்களுக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால், நெபுலைசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ், கால்நடை மருத்துவக் குழுவினருடன் பூங்காவுக்கு சென்று சிங்கங்களை பரிசோதித்தார். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், பூங்காவில் புலிகளின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதே போன்று, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப ஆய்வு நடத்தப்படுவதோடு, வெளி ஆட்கள் உள்ளே செல்லத் தடை விதிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.