ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

Photo of author

By Parthipan K

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை  ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன அமீரகம்  செல்லும் முன்பு ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.