சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.
இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் டிரம்ப் அயர்லாந்து பிரதமர் இருவரும் சந்திக்கும் போது வணக்கம் கூறி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப் தான் இந்தியா சென்று வந்ததில் இருந்து கைகுலுக்குவதை தவிர்த்து வணக்கம் கூறுவதையே பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.
அந்த சந்திப்பில் அயர்லாந்து பிரதமருடன் வந்த அதிகாரிகளுள் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டதால் அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து டிரம்பிடம் கேட்ட போது தனக்கு இது எந்த அறிகுறியும் இதுவரை இல்லை, இந்த சந்தேகத்தை தீர்க்க பரிசோதனை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.