கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!!

0
227

கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!!

சீனாவின் வூகான் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் டிரம்ப்பிற்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று முதலில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்கிற பரிசோதனை நடத்தியபோது 2 வது முறையும் எவ்வித கொரோனா அறிகுறியும் டிரம்ப்புக்கு இல்லை என்று உறுதியானது. மேலும் அதிபர் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அந்நாட்டு மக்களிடம் அதிகரித்து வருகிறது.

Previous articleசாராயத்தை விட இதில் தான் போதை அதிகம் : இயக்குநர் பார்த்திபன் பரபரப்பு தகவல்!
Next articleமஹாராஷ்டிராவில் இருந்து கையில் பணமில்லாமல் நடந்தே வந்த தமிழக இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here