காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

0
151

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி பலர் வெளியே வருவதாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இல்லாமல் சாதாரண சூழலையே சிலர் கடைபிடிப்பதாலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 571 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த நபர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் தாலுக்கா முழுவதும் ஏப்ரல் 14 வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த சோதனையும் நடத்தப்பட உள்ளது.

Previous articleஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!
Next articleகொரோனா தொற்று 13லட்சத்தை தாண்டியது : அலறும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்!