காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

Photo of author

By Jayachandiran

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்துவரும் நிலையில் காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் அங்கு குறைந்துள்ள காரணத்தால் நாளை (ஞாயிறு) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு எபோலா வைரஸ் பரவல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

காங்கோவின் கிழக்கு பகுதியான பெணி நகரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 17 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் தொடர் பரிசோதனையில் பேரில் அவருக்கு எபோலா வைரஸ் இருந்தது உறுதியானுது. கிட்டத்தட்ட 50 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி அவருக்கு எபோலா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்த அரசு நடவடிக்கை எடுத்த சூழலில் எபோலா வைரஸ் பாதிப்பு அந்நாட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனாவின் தாக்கம் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் சமயத்தில் எபோலா வைரஸ் பாதிப்பு தலைதூக்கினால் என்னாவது என்று பலரும் அச்சமடைந்துள்ளனர்.

காங்கோவில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 200 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை போலவே எபோலாவும் உயிரை கொல்லும் ஆபத்தான நோய். காய்ச்சல், வாந்தி , சளி மற்றும் மனிதர்களின் வியர்வை மூலமும் மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டதாகும்.