ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!

நடிகை ரோஜா சாலையில் நடந்து வர அவரது இருபக்கம் நின்றிருந்த மக்கள் அவரது பாதங்களுக்கு மலர்தூவி பின்னர் மாலையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த ஆபத்தான சூழலில் ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக உள்ள நடிகை ரோஜா தனது சொந்த தொகுதியான நகரிக்கு சமீபத்தில் விசிட் செய்தார்.

தொகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படை தேவைக்காக புதிய போர்வெல் போடப்பட்டிருந்தது. இதனை திறந்து வைக்க சென்றபோது சாலையின் இருபுறத்திலும் மக்களும், தூய்மை பணியாளர்களும் நின்று பாதையில் பூவினை தூவினர். இதற்கு வணக்கம் தெரிவித்து சினிமாவில் வருவது போல் மக்களை கைகூப்பி வணங்கியவாறு ரோஜா நடந்து வந்தார்.

இதன் பின்னர் அவருக்கு அப்பகுதி மக்கள் பிரம்மாண்டமான மாலை ஒன்றை அணிவித்து வரவேற்பை முடித்தனர். பின்னர் போர்வெல் திறப்பு விழா சிறப்பாக முறையில் முடிந்தது. ஊரடங்கு நேரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அரசின் விழிப்புணர்வை மறந்து கும்பலாக நின்றது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.