ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!!

Photo of author

By Jayachandiran

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 206 நாடுகளுக்கு பரவியதன் மூலம் தினசரி நோயாளிகள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு, ஈரான் போன்ற நாடுகள் பெருமளவு தாக்கத்தால் தடுமாறி வருகின்றன. இதுவரை தடுப்பூசி மருந்துகளோ நிரந்தரமாக குணமாக்க புதிய மருத்துவமுறையோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை.

கொரோனாவின் தாக்கத்தை குறைக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி மற்றும் பல அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் அங்கு ஜூன் மாதம் வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் லீ அறிவித்துள்ளார். இதுவரை சிங்கப்பூரில் கொரோனாவால் இன்றைய பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,111 பேராக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 9,125 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அங்கு கூறப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உலக சுகாதார மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு இனிமேல்தான் அதிகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.