சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மாநகராட்சி தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! ராயபுரத்தில் ஒரே நாளில் 24 பேர்?
சென்னை ராயபுரம், அம்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் திட்டம் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக மக்கள் தொகை வசிக்கும் இடமாக சென்னை பெருநகரம் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு காரணத்தால் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வேலையாட்கள் வந்து தங்கி பணி செய்யும் இடமாகவும், பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் சுற்றுலா பகுதிகள் இருப்பதால் சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் என்றே சொல்லலாம்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 358 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 86 பேர் மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகியுள்ளனர். அதிக பாதிப்பாக ராயபுரத்தில் 116 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில்
46 பேர், தேனாம்பேட்டையில் 42 பேர், திரு.விக.நகரில் 42 பேர், கோடம்பாக்கத்தில் 35 பேர், அண்ணா நகரில் 25 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் திருவொற்றியூர் பகுதியில் 12 பேரும், வளசரவாக்கத்தில் 11 பேரும், பெருங்குடியில் 8 பேர், அடையாறு மற்றும் ஆலந்தூரில் 7பேர், மாதவரத்தில் 3 பேர், சோழிங்கநல்லூரில் 2பேர் மற்றும் அம்பத்தூரில் முதல் தொற்று நேற்று ஒருவருக்கு பாதித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் 65% சதவீத ஆண்களையும், 34% சதவீத பெண்களையும் பாதித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் நேற்று மட்டுமே 24 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் அங்கு தீவிர பாதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.