கொரோனா பாதிப்பிற்கு ஆய்வு செய்த மருத்துவ கழிவுகளை உண்டு 10 நாய்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதுகாப்பு மையங்கள், மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனிமைபடுத்தும் வார்டுகள் போன்றவற்றில் இருந்து பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ சோதனை மையங்களில் இருந்து நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
குறிப்பாக மாநகராட்சி மருத்துவ கழிவுகளுடன் சேராமல் தனித்த நிற பைகளில் கொண்டு சொல்லப்படுகிறது. வழக்கமான மருத்துவ கழிவுகளையும் கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்திய கழிவுகளையும் வெவ்வேறாக எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் பயன்படுத்தி வீசப்பட்ட கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்டு 10 நாய்கள் உயிரிழந்துள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துள்ளார்.
இச்சம்பவம் அங்கு வேலை செய்யும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் சுகாதார மையத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் தனியே அனுப்புவதாக கூறப்பட்ட நிலையில், இப்படி அலட்சியமாக வெளியில் வீசப்பட்டதற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று புகார் கூறப்படுகிறது.
மேலும் சென்னை அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.