சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மராட்டிய மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மராட்டிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.