இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

0
172
Corona virus is decreasing a bit in these countries !!
Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 97 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடியே 53 லட்சத்து 72 ஆயிரத்து 893 பேர் குணமடைந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 76 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளான, அமெரிக்காவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 39,06,83, 223 மற்றும் இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,46,613 குணமடைந்தோர் எண்ணிக்கை 8,61,37,546 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 4,36,72,155 மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,474இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,96, 427ஆக பதிவாகியுள்ளது. பிரேசில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3,30,05,278 மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,74,166 இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,46,111ஆக பதிவாகியுள்ளது.

பிரான்ஸில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3,25,48,947 மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,50,305 இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,02,04,294 ஆக பதிவாகியுள்ளது.இதைதொடர்ந்து ஜெர்மனியில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,91,80, 489மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,42,035 இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,73,90,700 பதிவாகியுள்ளது.

மேலும் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ்  சற்று குறைந்து  கொண்டு வருகிறது என ஆய்வில் கூறப்படுகிறது.

Previous articleதியேட்டர்களில் மிரட்டிய கமலின் விக்ரம்… இப்போது ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை!
Next articleமழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!