கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

0
146

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

சீனாவில் உள்ள  வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது.

உருமாறிய ஓமிக்ரான் BA5 வகை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவம் என்பது ஒரு நல்ல விஷயமாகும். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 74 ஆயிரத்து 323 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஒரே ஒரு முறை பாலிசி எடுத்தால் போதும்! மாதம் வருமானம் வரும் எப்படி தெரியுமா?
Next articleஇந்த மாவட்டத்தில் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு! தற்போதைய நிலவரம் என்ன?