கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸ் : இறந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

Parthipan K

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், இன்று புதிதாக 350க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 5 பேர் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். விக்டோரியா மாநிலம், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது. இரண்டு வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து அங்கு, மூன்றிலக்க எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
விக்டோரியா மாநிலத்தில்  இறந்தவர்களின்  எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த மாநிலத் தலைமைச் சுகாதார அதிகாரி எச்சரித்தார். அருகில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று புதிதாக 15 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.