மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!
கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்பொழுது தடுப்பூசி நடைமுறையில் உள்ளது.இதுவே 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி நடைமுறையில் இல்லை.தற்பொழுது தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாங்கி உள்ளது.இன்னும் ஒரு சில மாதங்களில் அவர்களுக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் தற்பொழுது சற்று அதிகமாகி வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரத்து 72 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவே முந்தைய நாள் கணக்கின்படி 30 ஆயிரத்து 948 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.எண்ணிக்கை நாளுக்கு நாள் வேறுபட்டு காணப்படுகிறது.அதற்கும் முந்தைய நாளான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 457 பதிவாகி உள்ளது. இருதினங்களுக்கு முன்பு உள்ள பாதிப்புடன் தற்பொழுது பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.இருப்பினும் இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 389 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இதே நேற்று எண்ணிக்கையாக 403 ஆக இருந்தது.இதனை அனைத்தையும் கட்டுப்படுத்த மக்கள் அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.தற்பொழுது தன் பல மாநிலங்களில் தளர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.அதேபோல தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை ஆராயிந்து அதிகளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர்.