மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி!

0
88

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆரம்பமானது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணி முதலில் களம் புகுந்தது முன்னணி வீரர்கள் மூன்று பேர் மிக விரைவில் ஆட்டம் இழந்ததால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய நிதான ஆட்டத்தை தொடங்கினார்கள். பாபர் அரைசதம் கண்டு 75 ரன்னில் வெளியேறினார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார்.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ரிஸ்வான் 22 ரன்னும், அஷ்ரப் 23 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். அதோடு இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.இந்த சூழ்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது 6 ரன்னிலும் 31 ரன்னிலும் வெளியேறினார்கள்.

நவ்மான் அலி டக் அவுட் ஆகிப்போனார். ஹஸன் அலி 9 ரன்னிலும், ஆப்ரிடி 19 ரன்னிலும், வெளியேறினார்கள். காயம் காரணமாக வெளியேறி இருந்த பவாத் ஆலம் மீண்டும் களம் இறங்கி மிகவும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.

கடைசியில் 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தன்னுடைய முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக ரோச் 3 விக்கெட்களையும், சீலஸ் 3 விக்கெட்களையும்,ஹோல்டர்2,விக்கெட்டுகளையும்,கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாட தொடங்கியது தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகி அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். மூன்றாவது நாள் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து இருக்கிறது. பானர் 18 ரன்னுடனும் அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருக்கிறார்கள்.