ஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.

0
135
Corruption case! Former PM jailed for 12 years.
Corruption case! Former PM jailed for 12 years.
உலகெங்கும் ஊழல்கள் தலைவிரித்தாடும் நிலையில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை கிடைத்துள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக்குக்குதான் தான் 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் சுமார் 264 கோடி மலேசியாவின் ரிங்கிட் மதிப்பில் ஊழல் செய்திருந்தார். இது இந்திய ரூபாயில் சுமார் 4 ஆயிரத்து 150 கோடி ரூபாயாகும். இதனை மலேசியாவின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அவர் ஊழல் செய்துள்ளார்.
நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில் இந்தப் படங்கள் எல்லாம் மாற்றப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தது. இதில் அவருக்கு தொடர்பு இருந்ததாக இதனை விசாரித்த ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2018 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மலேசியாவின் முதலீட்டு நிதியிலும் கூட பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பெரும் முறைகேடுகள் செய்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரித்த மலேசிய நீதிமன்ற நீதிபதிகள் “முகமது கஸ்லாம் மற்றும் முகமது காஸ்லி” அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
இதனை விசாரித்த அந்த நீதிபதிகள் இருவரும் இவ்வழக்கானது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் மட்டுமே, சந்தேகத்திற்கு இடமின்றி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தீர்ப்பின் சாராம்சம் குறித்து நஜீப் ரசாக்கிடம் கேட்டபோது, அவர் “இது முற்றிலும் பொய்யானது என் மீது அவதூறு செய்கின்றார்கள், நான் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” எனவும், “அதில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” என அவர் தெரிவித்தார்.
Previous article500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 
Next articleஉடல் முழுவதும் வெள்ளையாக வேணுமா? வாரத்தில் மூன்று முறை இதை செய்யுங்க!