இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

0
266
#image_title

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி ஆகிய நகரங்களின் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்து தயாரிப்புகளை முறையாக மத்திய அரசு ஆய்கங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் கடந்த ஆக்டபர் மாதம் 66 குழந்தைகளும்,கடந்த டிசம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்த நிலையில் ஏற்றுமதி மருந்து தரம் குறித்து தீவிர கண்காணிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Previous articleமாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!!
Next articleகன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!